20 ஆண்டுகளில் 6658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு-சு. வெங்கடேசன் எம்பி
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) எழுப்பிய கேள்விக்கு (எண்…
பேரறிஞர் அண்ணா நினைவு நாள்:மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு!
அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, 3.02.2024 அன்று…
‘தமிழக வெற்றி கழகம்’ – கட்சியின் பெயரை அறிவித்தார்-நடிகர் விஜய்
“விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும்…
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள்!
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும். நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை…
பிப்ரவரி 2 – உலக சதுப்புநில நாள்: இழந்த சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கு உறுதியேற்க வேண்டும்!
இன்று உலக சதுப்புநில நாள் (#WorldWetlandsDay). நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே ஆகும். குளம், குட்டை, ஏரி, கழிமுகம், முகத்துவாரம், சதுப்பளம், கடலோர சதுப்புநிலக் காடுகள், காயல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து சதுப்புநிலங்களையும் முழு அளவில் பாதுகாக்கவும்…
வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்: அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி தைப்பூச நாளன்று பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும் – வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். சாதி, மதம், இனம் வேறுபாடுகளின்றி…
மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது!.தொல். திருமாவளவன்..
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘ இடைக்கால பட்ஜெட் ‘ முழுக்க முழுக்க பொய்களைக்கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது! 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்…
இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒரு வழக்கமான நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது – சசிகலா அறிக்கை
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை பார்க்கும் போது ஒரு வழக்கமான அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில் மக்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த, ஒரு சில அறிவிப்புகள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது.…
ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தேர்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் மூன்று (3) பயணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர்…