• Sat. Oct 18th, 2025

Month: July 2024

  • Home
  • பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான ஐயா மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஐயா மருத்துவர்…

ஆயிரம் பிறை கண்டும் அயராத ஆலமரம் மருத்துவர் அய்யா அவர்களின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்!.. அன்புமணி ராமதாஸ்

ஆயிரம் பிறை கண்டும் அயராத ஆலமரம் மருத்துவர் அய்யா அவர்களின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்! அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்த்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இன்று 86-ஆம் பிறந்தநாள். அவரால்…

AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க அறப்போர் கோரிக்கை…

கடந்த ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த திரு AK விஸ்வநாதன் IPS அறப்போர் மீது போட்ட தொடர் சட்ட விரோத பொய் வழக்குகளுக்காக அவர் மீது ஏற்கனவே செப்டம்பர் 2019 இல் அரசிடம் புகார் கொடுத்து இருந்தோம். முன்னாள் அமைச்சர்…

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை… தேர்ச்சிக் கடிதங்களை உடனே வழங்குக…அன்புமணி

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவிதொகை: முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள்…

கேரளத்துக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்: உயர்கல்வித்துறை

கேரளத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவுடன் டி20 தொடர் இலங்கை அணி அறிவிப்பு

இந்திய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. டி20 போட்டிகள் ஜூலை 27, 28, 30ல் நடைபெற உள்ளன.…

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிந்து சவரன் ரூ.52,000த்திற்கும் கீழ் சென்றது. இந்த விலை குறைப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட்…

13 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 13 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் BS 6 ரக 10 புறநகர் பேருந்துகள், 3 நகரப் பேருந்துகள் சேவை தொடக்கம் செய்யப்பட்டது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி

சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் டிவிட்டர் பதிவில், “2024-25 நிதிநிலை அறிக்கை பழைய முறையையே பின்பற்றுகிறது. அதில் ஒருசில பணக்காரர்களை தவிர, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம்,…

100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு..!

100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு செலவான ரூ.1.05 லட்சம் கோடியைவிட குறைவாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 10…