அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் கவிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள சான் டியோகா பகுதி முழுவதும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்போல் ஆளுநர்…
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆக.27-ல் முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் புறநோயாளிகளுக்கான சேவை நிறுத்தம்
கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் புறநோயாளிகளுக்கான சேவை நிறுத்தபடுவதாக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில்…
பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் நாடு திரும்பினர்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் டெல்லிக்கு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்: சீமான் கோரிக்கை
வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஒன்றியத்தை ஆளும்…
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு- காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில்…
பாடப் புத்தகங்களின் விலை உயர்வு!..
தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இதில், அரசு பள்ளிகள் மற்றும்…
டிரம்ப் குற்றச்சாட்டு
முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசாரம் குறித்த இமெயில்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் சில வெளிநாட்டு ஏஜென்டுகளின் தலையீடு உள்ளது…
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆக.16 முதல் பயணிகள் கப்பல்…
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆகஸ்ட்.16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ”செரியாபாணி”…