• Sun. Oct 19th, 2025

Month: August 2024

  • Home
  • பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!..

தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச் சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

புற்றுநோய் மருந்துகள் விற்பனை செய்யும் திட்டம் நாளை தொடக்கம்

கேரளாவில் புற்றுநோய் மருந்துகளை எந்தவித லாபமும் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. அதிக விலையுள்ள புற்றுநோய் மருந்துகளை லாபம் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் “காருண்யா ஸ்பர்ஷம்”. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் காருண்யா என்ற பெயரிலான மருந்தகங்களில்…

செப்.2ல் பாஜ உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்!..

பாஜவின் தேசிய பொது செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 2ம் தேதி முதல் பாஜ உறுப்பினர் சேர்க்கை தொடங்குகின்றது. பிரதமர் மோடியின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைப்பார்.…

அண்ணாமலையை பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: பாஜக

* ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம்* வசை பாடினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்* பாஜ துணைத் தலைவர் கரு.நாகராஜன் எச்சரிக்கை சென்னை: என்றும், அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்றும், வசை பாடினால் வேடிக்கைப் பார்த்துக்…

“அண்ணாமலை விரக்தியில் பேசி வருகிறார்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!..

அதிமுகவை ஒழிக்க அண்ணாமலையின் அப்பா, முப்பாட்டனால் கூட முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தரம் தாழ்ந்ததாக…

மது ஒழிப்பு மகளிர் மாநாடு: திருமாவளவன் அறிவிப்பு

விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் மதுஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ளோம்.…

பிசிசிஐ அனைத்து ஜூனியர் மற்றும் பெண்கள் போட்டிகளில் வீரர்களுக்கு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்துகிறது.

விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் போன்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கிரிக்கெட் பரிசுத் தொகையை வழங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில்…

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு!..

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணத்தை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம்…

கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு; எலான் மஸ்க்

கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட்…