காவிரி பிரச்னையில் விரைவில் ஒருமித்த கருத்து: தேவகவுடா
காவிரி பிரச்னை குறித்து இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். மதசார்ப்பற்ற தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேற்று காலை திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம்…
”பா.ஜ.க, இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி ஆகிருக்காது”: எல்.முருகன் பதிலடி
அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளது நாங்கள் தான் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மீனவர்கள் தட்ப வெப்பநிலை, புயல் போன்ற காரணங்களினால்…
நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்.
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் விமானம் திருவனந்தபுரத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்…
அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!..
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை…
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார்!… விஜய்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்து, சிறப்பு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நாடெங்கும் நம் கொடி பறக்கும்…
டிசம்பர் 1ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகிறார் ஜெய் ஷா…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து ஐ.சி.சி…
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய…
2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு…