தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்-2023
ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில் கடந்த 2021ம் ஆண்டிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நோக்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் 2023ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் கீழ்காணும் வகையில் நடைபெறவுள்ளது.
விதிமுறைகள்:
1. பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
2. பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட்
பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 01.01.2023 அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி/கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கப்பட்டது)
பள்ளி சான்றிதழ்கள்
இருப்பிடச் சான்றிதழ்
3. பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படாது