• Sun. Oct 19th, 2025

அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

Byமு.மு

Jan 4, 2024
அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பயன்பெறும் வகையில் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி வழங்குவது குறித்தும் பொது விநியோகத் திட்டத்தில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் குறித்தும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் 02.01.2024 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொது விநியோக அங்காடிகளில் உள்ள உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் விநியோகம் நிலையினை மாநிலம் முழுவதும் கண்காணிக்கவும் அறிவுத்தினார்.

மேலும், அறிவிப்பின் தற்போதைய நிலையினை பற்றியும், முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆகியோர்களின் பல்வேறு செயல்பாடுகளின் முன்னேற்ற நிலையினை குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தயார் நிலை மற்றும் கொள்முதல் செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பொது விநியோக அங்காடிகளில் உள்ள உணவுப்பொருள்களின் இருப்பு / எடுப்பு மற்றும் விநியோகம் நிலையினைக் கண்காணித்து தின அறிக்கையினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் பார்வைக்குச் சமர்ப்பித்திட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

உணவுத் திருவிழா சென்னை, திண்டுக்கல் மற்றும் இதர மாவட்டங்களில் நடத்திடவும் திண்டுக்கல் மாவட்டதைப் பொருத்தவரையில் பள்ளியில் உணவுத் திருவிழா நடத்திடவும் அதன்பின்னர் கூட்டுறவுத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்திட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் கழக நவீன அரிசி ஆலையின் வரவு செலவு கணக்கினைத் தனி தலைப்பின் கீழ் இலாப நட்டக் கணக்கினைத் தனித்தனியே கணக்கிட்டு லாப நோக்குடன் செயல்படுவதற்கு உரிய திட்டம் வகுக்க உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்களால் நிதி ஆலோசகர் மற்றும் கணக்கு தணிக்கை அலுவலர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Paddy Processing Agreement (PPA) மூலம் நவீன அரிசி ஆலைத் திட்டத்தினைத் துரிதப்படுத்திச் செயல்படுத்திட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.