• Sun. Oct 19th, 2025

“தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு.

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்" குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிப்பு.

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு,

நூற்றாண்டு விழா நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படபோட்டி (Short film Competition) மற்றும் சுருள்படபோட்டி (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது. அச்செய்தி வெளியீட்டில் இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை 20.12.2023-க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிர்வாக காரணங்களால் இப்போட்டிகளுக்கான கடைசி தேதி 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

இப்போட்டிகளுக்காக பெறப்படும் சுருள்படங்கள் மற்றும் குறும்படங்களை தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் குழுவால் இறுதிசெய்யப்பட உள்ளதால் இப்போட்டிகளில் கலந்து கொள்ள

விருப்பமுள்ளவர்கள் ஏற்கனவே வெளியிப்பட்டுள்ள (செய்தி வெளியீடு (Press release) எண்.2179, நாள்:31.10.2023)வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறும்படங்களை (Short films) [email protected] முகவரிக்கும் மற்றும்

என்ற மின்னஞ்சல் [email protected] சுருள்படங்களை என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வைக்குமாறு கேட்டுக் 15.01.2024 தேதிக்குள் அனுப்பி கொள்ளப்படுகிறது.

குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டிகளுக்கான (Reels Competition) வழிகாட்டி நெறிமுறைகள் https://dipr.tn.gov.in (செய்தி வெளியீடு (Press release) எண்.2179, நாள்:31.10.2023) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.