• Sun. Oct 19th, 2025

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – சீமான் வாழ்த்து

Byமு.மு

Jan 6, 2024
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் - சீமான் வாழ்த்து

இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி!

ஆஸ்கார் வரை வென்று உலகோர் நெஞ்சில் தமிழின் தடம் பதித்த தங்கத் தமிழன்!

தன் இனப்பற்றாலும், மொழிப்பற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
சான்றாய் திகழும் சாதனை தீரன்!

தன் தேனிசையால் கேட்போர் இதயங்களை மெய்யுருக வைக்கும் பாட்டிசை வேந்தன்!

என் பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரர், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!