• Sun. Oct 19th, 2025

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024

Byமு.மு

Jan 6, 2024
கனமழை பாதிப்பு: அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது VinFast நிறுவனம்
ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளது குறித்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EV Car மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!

தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 -இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!