• Sun. Oct 19th, 2025

பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் – அமைச்சர் ஆய்வு

Byமு.மு

Jan 8, 2024
தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

08.01.2024 காலை 8.30 மணி முடிய தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சராசரியாக 2.15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 13.18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகமாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்

வ. எண்.மாவட்டம்பதிவான மழை அளவு (செ.மீ.)
1மயிலாடுதுறை13.18
2நாகப்பட்டினம்11.92
3திருவாரூர்10.13
4கடலூர்9.43
5செங்கல்பட்டு7.43
6விழுப்புரம்7.29
7அரியலூர்5.04
8காஞ்சிபுரம்4.91
9தஞ்சாவூர்4.17
10சென்னை3.92
11திருவள்ளூர்2.66
12கள்ளக்குறிச்சி2.38
13திருவண்ணாமலை2.01
14இராணிப்பேட்டை1.62
15பெரம்பலூர்1.21

அதி கனமழை (20.44 செ.மீ.-க்கு மேல்)

வ. எண்.மாவட்டம்மழைமானி நிலையம்பதிவான மழை அளவு (செ.மீ.)
1மயிலாடுதுறைசீர்காழி23.6
2கடலூர்சிதம்பரம்22.9
3நாகப்பட்டினம்வேளாங்கண்ணி21.6
4திருவாரூர்திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம்21.2
5நாகப்பட்டினம்நாகப்பட்டினம்20.6

மிக கனமழை (11.56 செ.மீ. முதல் 20.44 செ.மீ. வரை)

வ. எண்.மாவட்டம்மழைமானி நிலையம்பதிவான மழை அளவு (செ.மீ.)
1மயிலாடுதுறைஅணைகாரஞ்சத்திரம் (கொள்ளிடம்)19.44
2கடலூர்புவனகிரி18.90
3திருவாரூர்வட்டாட்சியர் அலுவலகம், நன்னிலம்16.46
4கடலூர்சேத்தியாத்தோப்பு15.50
5கடலூர்அண்ணாமலை நகர்14.78
6நாகப்பட்டினம்திருப்பூண்டி14.36
7கடலூர்காட்டுமன்னார்கோயில்14.30
8கடலூர்இந்திய வானிலை ஆய்வுத் துறை13.66
9திருவாரூர்குடவாசல்13.44
10விழுப்புரம்மரக்காணம்13.30
11கடலூர்கொத்தவாச்சேரி13.00
12செங்கல்பட்டுமாமல்லபுரம் பொதுப்பணித் துறை பயணியர் விடுதி12.20
13கடலூர்லால்பேட்டை12.10
14விழுப்புரம்வானூர்12.00
15கடலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்11.84

சென்னை மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3.92 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

வ. எண்.மாவட்டம்மழைமானி நிலையம்பதிவான மழை அளவு (செ.மீ.)
1சென்னைமண்டலம் 12 ஆலந்தூர்7.41
2மண்டலம் 12 மீனம்பாக்கம்6.95
3மண்டலம் 01 கத்திவாக்கம்6.93
4மண்டலம் 15 உத்தண்டி6.86
5ஆலந்தூர்6.55
6மண்டலம் 12 D156 முகலிவாக்கம்6.48

தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 07.01.2024 (இரவு 8.30 மணி) நாளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாள்கனமழை எச்சரிக்கை – மாவட்டங்கள்
08.01.2024கனமழை முதல் மிக கனமழை – செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை – விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
09.01.2024கனமழை – திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
10.01.2024கனமழை – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில்சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு  சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மீனவர்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது:-

08.01.2024தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
09.01.2024 முதல் 11.01.2023 வரைதென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மேற்சொன்ன பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், கனமழையினை காரணமாக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆடசியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள், JCB இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய 2 வட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
  • அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, பொதுமக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்ற நீர் வள ஆதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து தீர்வு காணும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (08.01.2024) மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களது ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன், இ.ஆ.ப., உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.