• Sun. Oct 19th, 2025

ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Byமு.மு

Jan 8, 2024
ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி 09.01.2024 அன்று நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி ஆன்மிக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் நாளை (09.01.2024) மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்ச்சியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் மகாசிவராத்திரி பெருவிழா, நவராத்திரி விழா, பௌர்ணமி திருவிளக்கு பூஜை, ஐயப்பன் மலர் வழிபாடு போன்ற சிறப்பு வழிபாடுகளும்  வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான ஐயப்பன் மலர் வழிபாடு நாளை (09.01.2024) மாலை மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் ஆன்மிக சான்றோர்கள் மற்றும் இறையன்பர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. இம்மலர் வழிபாட்டினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஐயப்பன் திருவுருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையை வழங்கி சிறப்பு செய்கின்றார்.  

அதனைத் தொடர்ந்து, அருள்மிகு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனையும், கலைமாமணி வீரமணி அவர்களின் இசை வாரிசு வீரமணிகண்ணன் கோடீஸ்வரன் குழுவினரின் ஐயப்பன் பக்தி பாடல்களும்,  திருமதி வைஷ்ணவி சுகுமார் குழுவினரின் ஐயப்ப சரித்திரம் என்ற நாட்டிய நாடகமும், அன்னதானமும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்களும், இறையன்பர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.