தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடக்க நிகழ்வின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாமலேரி முத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்கள் திருப்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் அ.நல்லதம்பி அவர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் முன்னிலையில் பொங்கல்தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகப்பு அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் அடிப்படையில் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது
தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 133 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, மற்றும் ரொக்க தொகையாக ஆயிரம் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்திருக்கிறார்.
அனைவரும் இந்த பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவும், இயற்கைக்கு நன்றி செலுத்துகின்ற விதமாக இந்த விழா அமைய வேண்டும் என்பதற்காகவும் பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழர்களுடைய பாரம்பரிய சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் இயற்கையை தான் போற்றி புகழ்ந்து இருப்பார்கள். முதற்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முத்தமிழ் காப்பியம் ஆகிய இக்காப்பியத்தில் இறைவனாக இயற்கையை தான் போட்டிருப்பார்கள்.
திங்களைப் போற்றுதும் திங்களைப்போற்றுதும்-ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்-மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்-என்ற சிலப்பதிகாரத்தின் பாடலில் இயற்கை நமக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்கின்றதோ அதற்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றோம்.
அனைத்து மக்களும் பொங்கல் திருநாளை சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் தான் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 509 நியாய விலை கடைகளில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 702 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 37.62 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு இந்த 4 நாட்களில் வழங்கப்பட உள்ளது.
இன்றைய தினம் தொடங்கிய 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது இதற்கு முன்பாகவே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்,
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட கட்டுப்பாட்டு எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என பத்திரிகை செய்திகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடை பணியாளர்கள் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு துணை ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு மண்டல அலுவலர்கள் கண்காணிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வருவார்கள்.
மேலும் ஆயிரம் குடும்ப அட்டைகள் மேலாக இருக்கின்ற நியாய விலை கடைகளில் இரண்டு பணியாளர்களும் 1500 குடும்ப அட்டை தாரர்களுக்கும் மேலாக உள்ள நியாய விலை கடைகளுக்கு இரண்டு பணியாளர்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் யாருக்கும் பரிசுதொகுப்பு இல்லை என்று குறைபாடுகள் இருக்காது. மேலும் கரும்பு கொள்முதல் செய்வதில் நமது மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அதன் பிறகு தான் பிற மாவட்டத்தில் இருந்து கரும்பு கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
உள்ளுார் விவசாயிகள் ஒருவர் கூட பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க வில்லை என்றால் 14ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியோர்கள் ஆகியோர் நியாய விலை கடைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வருகின்ற பொழுது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் அதனால் யாரும் கடைகளுக்கு முந்தியடித்து சென்று நியாய விலை கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுத்த வேண்டாம். எனவே பொங்கல் பரிசுத்தொகை பெறுவதற்கு ஒவ்வொருவராக குறித்த நேரத்தில் குறித்த நாளில் சென்று பெற்றுக்கொள்ளலாம் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். இதற்கு முன்பாக அரசு அலுவலர்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலைப்பாட்டில், நேற்றைய தினம் அவர்களுக்கும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகங்களில் இருப்பவர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, சோமலாபுரம், கிருஷ்ணாபுரம், சின்னசமுத்திரம் ஆகிய நியாய விலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி அவர்களுடன் நேரடி ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி சிறப்பித்தனர், தொடர்ச்சியாக வாணியம்பாடி நூருல்லாபேட்டை நியாய விலை கடைகளிலும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பொங்கல் தொகுப்புகள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி சிறப்பித்தனர், தொடர்ந்து ஆம்பூர் பெரியாங்குப்பம் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் திருமதி.சத்யா சதீஷ்குமார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.