• Mon. Oct 20th, 2025

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Byமு.மு

Jan 11, 2024
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா

காரைக்காலில் அமைந்துள்ள, புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில்  சமத்துவப் பொங்கல் விழா இன்று (11.01.2024) கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி நிர்வாகமும், புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகப் பணியாளர் நலச் சங்கமமும் இணைந்து நடத்தின.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத்தின் பதிவாளர் முனைவர்           சீ. சுந்தரவரதன் கலந்துகொண்டார். இவ்விழாவில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகத்தின் பணியாளர் நலச்சங்கத்தின் தலைவர் சித்தார்த்தன், துணைத் தலைவர் திருமதி. கீதா, செயலாளர் பாலமுருகன், இணைச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.