தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (11.1.2024) முகாம் அலுவலகத்தில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்கள் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டு துணைத் தூதர் எட்கர் பெங்க் (Edgar Pang), உதவி இயக்குநர் ஷான் லிம் யங் சென், முதுநிலை மேலாளர் சுரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.