• Mon. Oct 20th, 2025

தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து சம்பாதிக்க வாய்ப்பு தருவது நியாயமா?

Byமு.மு

Jan 11, 2024
தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து சம்பாதிக்க வாய்ப்பு தருவது நியாயமா

தமிழ்நாட்டு மக்கள் பணம் 3000 கோடியை கொள்ளை அடித்த அதானி மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்ல வரும் செய்தி என்ன?
தமிழக மக்களின் மின் கட்டணம் அதிகரிக்க காரணமாக இருந்த இந்த நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த ஊழலை செய்தவர்களுக்கே மீண்டும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து சம்பாதிக்க வாய்ப்பு தருவது நியாயமா?

முதலமைச்சர் யாரை காப்பாற்ற முயல்கிறார் ?

  • அதானியையா?
  • முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனையா ?
  • முன்னாள் மின் வாரியத் தலைவர் ஞானதேசிகனையா?

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது விசாரணை நடத்த திமுக ஆட்சிக்கு என்ன பயம்? பிரதமர் மோடி தனது நண்பர் அதானியை விசாரிக்க கூடாது என்று எச்சரிக்கை விட்டுள்ளாரா? அல்லது இது அதிமுக திமுக டீலா?

அதானி ஊழல் மீது விசாரணைக்கு அனுமதி அளிக்காமல் இருக்க ஒரு நியாயமான காரணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தைரியமாக சொல்வாரா? -இவ்வறாக அறப்போர் இயக்கத்தினர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.