சென்னை ஜனவரி 11 2024
பாடி அனைத்து வியாபார நலச்சங்கம் சார்பாக பாடி டிஎம்பி நகரில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது!..
பொங்கல் நிகழ்ச்சியில் டிஎம்பி நகர் பகுதி வாழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பெண்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் அனைவரும் குடும்பங்களாக கலந்து கொண்டு சிறப்பான ஒரு நாளை உருவாக்கியுள்ளனர். மத நல்லிணக்கத்தோடு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டது இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்படையை செய்தது.



