சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சுவாமி விவேகானந்தர் குறித்த தனது கருத்துகளின் காணொலிஇயையும் மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“உலக அரங்கில் இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை நிறுவிய சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆற்றலும், உற்சாகமும் நிறைந்த அவரது எண்ணங்களும், செய்திகளும் காலங்காலமாக இளைஞர்களை ஊக்குவிக்கும்.”