• Mon. Oct 20th, 2025

பாலாசாகேப் தாக்கரே பிறந்தநாள்! – பிரதமர் மோடி மரியாதை!

பாலாசாகேப் தாக்கரே பிறந்தநாள்! – பிரதமர் மோடி மரியாதை

பாலாசாகேப் தாக்கரே பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பாலாசாகேப் தாக்கரே ஓர் உயர்ந்த மனிதர் என்றும், மகாராஷ்டிராவின் அரசியல் மற்றும் கலாச்சாரப் பரப்பில் அவரது தாக்கம் இணையற்றது என்றும் மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

 “பாலாசாகேப் தாக்கரே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். அவர் ஓர் உயர்ந்த தலைவராக இருந்தார். மகாராஷ்டிராவின் அரசியல் மற்றும் கலாச்சாரப் பரப்பில் அவரது தாக்கம் இணையற்றது. அவரது தலைமைத்துவம், கொள்கைகளுக்கான அவரது தளராத அர்ப்பணிப்பு, ஏழைகள் அடித்தட்டு மக்களுக்காகக் குரலெழுப்பும் உறுதிப்பாடு ஆகியவற்றின் காரணமாக எண்ணற்ற மக்களின் இதயங்களில் அவர் வாழ்கிறார்.”