சென்னை போயஸ்கார்டனில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கு அருகே அமைந்துள்ள அருள்மிகு ஜெயவிநாயகர் திருக்கோவிலில் இன்று காலை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கு எதிரே அமைந்துள்ள புதிய இல்லத்தில் கோ பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அதன்பிறகு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
