தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
“நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகவும், வாக்காளர்களாகப் பதிவு செய்ய மக்களை ஊக்குவிக்கும் நாளாகவும் உள்ள தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாழ்த்துக்கள்.
காலை 11 மணிக்கு, இந்தியா முழுவதிலுமிருந்து முதல்முறை வாக்காளர்களை ஒன்றிணைக்கும் புதிய வாக்காளர் சம்மேளனத்தில் நான் உரையாற்ற உள்ளேன்”.