• Mon. Oct 20th, 2025

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Jan 25, 2024
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம்- காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு அவர்கள் நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு அவர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபு அவர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.