• Mon. Oct 20th, 2025

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் குடியரசு தின விழா

Byமு.மு

Jan 26, 2024
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் குடியரசு தின விழா

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகம் வளாகத்தில் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) காலை 08.15 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினில் கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையையும், தேசிய தொழில்நுட்ப கழக காவலர்கள் படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். பின்பு உரையாற்றிய கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன், குடியரசு தினத்தின் சிறப்பை பற்றியும் இத்தினத்தைக் கொண்டாடுவதின் நோக்கத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

பின்னர், இவ்விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன், டீன் முனைவர். நரேந்திரன் ராஜகோபாலன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.