• Sun. Oct 19th, 2025

விருதுநகர்:கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை!

Byமு.மு

Jan 29, 2024
விருதுநகர்:கழக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை

கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை – ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்றைய தினமும் நடைபெற்றது.

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம்.

விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்டக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய – நகர – பேரூர் நிர்வாகிகள், கழகத்தின் உள்ளாட்சி பிரநிதிகளிடம், தொகுதியில் தற்போது நிலவும் சூழலை விரிவாக கேட்டறிந்தோம்.

நடைபெற இருப்பது மக்களவைத் தேர்தல் என்றாலும், இது மாநிலங்களை காப்பதற்கானத் தேர்தல் என்பதை உணர்ந்து வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டோம்.