• Sun. Oct 19th, 2025

பிப்ரவரி 5ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள எஸ்டிஐ மையத்தைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திறந்து வைப்பார்.

Byமு.மு

Jan 30, 2024
பிப்ரவரி 5ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள எஸ்டிஐ மையத்தைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திறந்து வைப்பார்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் சமபங்கு அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டுக்கான அறிவியல்  பிரிவின் நிதி உதவியோடு “தொழில்நுட்ப உதவியுடனான மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பட்டியல் இன சமூகத்தின் சமூக – பொருளாதார மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்பு (எஸ்டிஐ) மையம்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரி, வருகின்ற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொடர் பயிற்சித் திட்டத்தினை நடத்த உள்ளது. 

என்ஐடி புதுச்சேரி வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தில் பயனாளிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்காக சூரிய மீன் உலர்த்திகள், மீன் பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட சேமிப்பு அறை போன்ற பல நவீன உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. என்ஐடி புதுச்சேரியில் உள்ள எஸ்டிஐ மையத்தைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 05.02.2024 அன்று திறந்து வைப்பார்.

இந்தப் பயிற்சி, முக்கியமாக பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளையும், சமூகத்தின் பிற நலிந்த பிரிவைச் சேர்ந்த பயனாளர்களையும் உள்ளடக்கியது. மேலும் இப்பயிற்சி, மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் பயிற்சியின் மூலம் பயனாளிகளுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் நிதி மேம்பாட்டிற்கு தீவிரமாக பங்களிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவருடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து திருவேட்டக்குடி என்ஐடி புதுச்சேரி வளாகம் வரை சென்று வர அனைவருக்கும் தினசரி நிகழ்ச்சியின் போது கட்டணமின்றிப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும்.

பங்கேற்பாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு பதிவு கட்டணம் இல்லை. நிகழ்ச்சி அட்டவணை தொடர்பான கூடுதல் விவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் வரும் வியாழக்கிழமை (01/02/2024) நான்கு (4) மணிக்குள் தங்களின் பெயர்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவருடன் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டாக்டர் ஹரிகோவிந்தன்,முதன்மை ஆய்வாளர்புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகம்மொபைல்: 94953 14044மின்னஞ்சல்: [email protected]திரு. ராகுல் காந்த் டி,இளநிலை ஆராய்ச்சி மாணவர்,புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகம்மொபைல்: 96774 55608மின்னஞ்சல்: rahul.gandh.d[at]gmail[dot]com