தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo மற்றும் நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் Mr. Manuel Manjón Vilda, ஆகியோர் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து சந்தித்துப் பேசினார்கள்.

ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், இராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் சந்தித்துப் பேசினார்கள்.
இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, இ.ஆ.ப., ஆக்சியானா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.