• Thu. Oct 23rd, 2025

எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!

Byமு.மு

Feb 4, 2024
எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்தத் தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அத்வானி அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கும் தனது நாட்டு மக்களுக்கும் தன்னலமின்றி சேவை செய்ய அர்ப்பணித்தவர் என்று எக்ஸ் தளப்   பதிவில் அமித் ஷா கூறியுள்ளார். நாட்டின் துணைப் பிரதமர் போன்ற பல்வேறு அரசியலமைப்புப் பொறுப்புகளை வகித்தபோது, தனது வலுவான தலைமையுடன் நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக முன்மாதிரியில்லாத பணிகளைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்திய அரசியலில் நம்பகத்தன்மையின் தரங்களை நிர்ணயித்த அரசியல்வாதியாக அத்வானி அவர்கள் அறியப்படுகிறார் என்று ஷா கூறியுள்ளார்.

அத்வானி தனது நீண்ட பொது வாழ்க்கையில் நாடு, கலாச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக அயராது போராடினார் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி மற்றும் சித்தாந்தத்திற்கு தமது மகத்தான பங்களிப்பை வார்த்தைகளில் கூற முடியாது என்று ஷா கூறியுள்ளார். அத்வானி அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு கிடைத்த கௌரவமாகும்.