புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த National Cadet Corps திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம் பிடித்து நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தப் பாராட்டு விழாவில் இன்று பங்கேற்றோம். நம் NCC cadets-க்கு ஊக்கத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினோம்.
மேலும் மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் தென்மாவட்ட மழை வெள்ளப் பாதிப்புகளின் போது, NCC மாணவர்கள் ஆற்றிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பாராட்டி உரையாற்றினோம். சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வரும் National Cadet Corps திட்ட மாணவ, மாணவியர்களுக்கு நமது திராவிட மாடல் அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.