தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக்கழகம் பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாட்டை ஒருங்கிணைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதற்காகப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு பிப்ரவரி 8,9&10 ஆகிய நாள்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் 1999–இல் ‘தமிழிணையம்99’ மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டை முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘தமிழ்இணையம்99’ மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மைப் பணிகளாகும். ‘தமிழ்இணையம்99’ மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு ‘தமிழ்99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழில் மென்பொருள்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில், ‘தமிழ்இணையம்99’ மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் அபரிமிதமாக வளர்ச்சிபெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த உரையாடல் கடந்த நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. எனினும், அண்மைக் காலத்தில் அது முழுவீச்சில் வளர்ச்சி கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பப் பாதையில் தமிழின் பயணம் சிறப்புற நிகழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்னும் நம்பிக்கையுடன் இம்மாநாடு முன்னெடுக்கப்படுகிறது. தமிழும் தொழில்நுட்பமும் இணைந்த இந்தப் பயணத்தைச் செழுமைப்படுத்த புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை அதிக அளவில் பயன்படுத்த இம்மாநாடு உறுதிபூண்டுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் தமிழை உட்புகுத்திப் பல்வேறு அனுகூலங்களைப் பெறும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. புது யுகத்திற்கேற்ப தமிழ் மொழியும் புதுப் பொலிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும் இந்த மாநாட்டின் இலக்காக இருக்கும்.
இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மொழியியல் அறிஞர்களும் கூகுள், மைக்ரோசாஃப்ட், லிங்க்ட்இன், டெக் மகேந்திரா, AI சிங்கப்பூர், ஸோஹோ உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் இம்மாநாட்டில் பங்குகொள்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் 50க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40 க்கும் மேற்பட்ட அமர்வுகள் & குழு விவாதங்களும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.
உலகெங்கிலும் உள்ள கணினித்தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் மொழி தவிர்த்த பிற மொழி ஆய்வாளர்கள், மொழிசார் மென்பொருள் உருவாக்குநர் ஆகியோரிடமிருந்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 35க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் வாசிக்கப்பட உள்ளன. இயற்கை மொழிச் செயலாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சுகளைப் புரிந்துகொள்ளல், உணர்வுப் பகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளை இவ்வாய்வுக் கட்டுரைகள் விவாதிக்கின்றன.
மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக 40 காட்சி அரங்குகள் மாநாட்டில் கலந்துகொள்வோர் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நிரலாக்கப் போட்டியை நடத்தியது. போட்டியில் கலந்துகொண்டவற்றில் சிறந்த நிரலாக்கங்களை வல்லுநர் குழு தேர்வுசெய்துள்ளது. அதில் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் நிரலாக்கங்கள் செயல்முறை விளக்கமாகச் செய்துகாட்டப்பட உள்ளன. மேலும், 7 பயிலரங்குகள் & பயிற்சிப் பட்டறைகளும் இம்மாநாட்டைச் செழுமைப்படுத்த உள்ளன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அதன் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறும். செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை உள்ளிட்ட தளங்களில் நடைபெறவிருக்கும் இந்தப் பன்னாட்டு மாநாடு அடுத்துவரும் சவாலான தொழில்நுட்ப யுகத்தை எதிர்கொள்வதற்கான வலுவான அடித்தளங்களை அமைத்துத் தரும்.
மேலும்,’கணித்தொகை’ பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாடு சிறப்பு மல’ரும், ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான, ’கணிக்கோவை கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள்’ நூலும் இந்தப் பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப்படும். தமிழுக்கான பெருந்திரள் மொழி மாதிரிகள் உருவாக்குவதற்கு AI சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழுக்கான AI தொழில்நுட்ப நிறுவன உருவாக்கம், மொழித் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, தமிழில் அதிநவீன மென்பொருள்களும் தொழில்நுட்பக் கருவிகளும் உருவாக்கப் பேரளவுத் தரவு உருவாக்கம் ஆகிய கொள்கை அறிவிப்புகள் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட கலைஞர் பகுப்பியும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கணிக்கோவை’ நூலும் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கணித்தமிழ் தொடர்பாக நடந்திருக்கும் விவாதங்கள், முயற்சிகள், முன்னெடுப்புகள் முதலியவற்றை உள்ளடக்கிய கணித்தமிழ் வரலாற்றைப் பேசும் மாநாட்டுச் சிறப்பு மலர் ‘கணித்தொகை’ நூலும் வெளியிடப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்குமான மிகப் பெரிய களம். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு முன்னோடித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடத்திய ‘தமிழ்இணையம்99’ மாநாடு நடைபெற்ற பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாள்களிலேயே பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு (கணித்தமிழ்24) நடைபெறுவதும், அதுவும் கலைஞர் நூற்றாண்டில் நடைபெறவிருப்பதும் சிறப்புக்குரியன. தொழில்நுட்பத் தளத்தில் உலகத் தரத்திற்குத் தமிழை உயர்த்தும் ஒரு முயற்சியான இம்மாநாட்டுக்கென பிரத்யேக இலச்சினை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு தொடர்பான விவரங்கள் https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் உள்ளன.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்கியிருந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் பலரும் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் விதமாக, பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தை சமூக நலத் துறையின் கீழ்… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர் இயேசு பெருமான். இயேசு காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அனைத்து மதம், மொழி பேசுவோரும், நல்லிணக்கத்தோடும் சமஉரிமையோடும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழும், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் முதலிய பல நலதிட்டங்களை செய்து வருகிறோம். ஏராளமான கிறிஸ்தவ கல்வி… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு,செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிச.24) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்றைய பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காகவே மதமாற்றத் தடைச் சட்டம், பொது சிவில்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். கொங்கு மட்டன் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், சிவகங்கை -மட்டன் உப்புக்கறி உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாளை முதல் டிச.24 வரை பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம் பற்றி பேசும் முன் உண்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ச்சுன் கார்கே கூறினார்.
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலந்தூர் தர்மராசா கோயில் தெருவில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் தலைமை வகித்தார். பகுதி இளைஞரணி அமைப்பாளர் கோ.பிரவீன் குமார் வரவேற்றார். பகுதி செயலாளர்கள் குணாளன், என்.சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை கழக… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றிய குழு ஆய்வுசெய்து வருகிறது.
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது ரெய்டுகள் நடத்தி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஜக கூட்டணி ஆட்சியில் இணைந்த பிறகு அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சொத்துகள் விடுவிக்கப்பட்டது.
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக-தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..