தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (08.02.2024) சென்னை, மதுரவாயல், அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் ரூ.73.76 இலட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.39.58 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்தல், திருக்கோயில் சொத்துக்களை பாதுகாத்தல், நிர்வாக பயன்பாட்டிற்கான அலுவலகங்களை ஏற்படுத்துதல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரவாயல், அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் ரூ.39.58 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டும், திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து கண்டறியப்பட்டு அதனை பாதுகாத்திடும் வகையில் ரூ.73.76 இலட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து தொடங்கப்பட்ட திருப்பணிகள் முடிவுக்கு வாராமல் இருந்ததை அறிந்து, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் திருப்பணிகளை விரைவுப்படுத்தி 2022 ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில் குடமுழுக்கினை சிறப்பாக நடத்தினோம். இத்திருக்கோயிலுக்கு உபயதாரர் நிதியில் சுமார் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டுகின்ற திருப்பணி விரைவில் தொடங்கி வைக்கப்படும்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,360 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நில மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு இதுவரை ரூ.5,594 கோடி மதிப்பிலான 6,180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல திருக்கோயில் சொத்துக்களை பாதுகாத்திடும் வகையில் மயிலாப்பூரில் நவீன ரோவர் கருவி உதவியுடன் தொடங்கப்பட்ட நில அளவை பணிகளில் இதுவரை 1,60,191 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டு திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
திருக்கோயில்களின் முகப்புகளில் கம்பீரமான ராஜகோபுரம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தினை செயல்படுத்திடும் வகையில் 2022 – 2023 ஆம் ஆண்டில் 6 திருக்கோயில்களுக்கு ராஜகோபுரம் அமைக்கவும், 2023 – 2024 ஆம் ஆண்டில் 15 திருக்கோயில்களுக்கு ராஜகோபுரம் அமைக்கவும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சட்டமன்ற அறிவிப்பில் அறிவிக்கப்படாத 3 திருக்கோயில்களையும் சேர்த்து மொத்தம் ரூ.55.50 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் முன்புறம் நேற்றைய முன்தினம் இரவு தனிநபர் ஒருவர் காகித துண்டுகளை தீயிட்டு எரித்த காட்சியானது திருக்கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் திருக்கோயிலுக்கு வெளியில் நடந்திருந்தாலும் திருக்கோயிலின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேபோல திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் அம்மனின் நகையை உதவி அர்ச்சகர் திருடி, அதை அடகு கடையில் அடமானம் வைத்திருந்தார். அந்த நகையை திருக்கோயில் நிர்வாகம் மீட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியானது சட்டத்தின்படி நடக்கின்ற ஆட்சி என்பதால் தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் வே.ராஜன் சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரமணி மாதவன், திருக்கோயில் செயல் அலுவலர் க.அருட்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..