• Fri. Oct 24th, 2025

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பட்ஜெட்-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Byமு.மு

Feb 8, 2024
9 நெடுஞ்சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் அமைச்சகத்தின் முதன்மைப் பொறுப்பாகும்.

இதன்படி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 ஆம் ஆண்டில் ரூ.31,130 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ .2,76,351 கோடியாக அதிகரித்துள்ளது.

2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் நீளம் தற்போது 1.6 மடங்கு அதிகரித்து தற்போது 1,46,145 கிலோ மீட்டராக உள்ளது. ஏப்ரல் 2014 முதல் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால், சாலைகளின் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 18,371 கி.மீ ஆக இருந்த நான்கு வழி மற்றும் அதற்கு மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் நீளம் 2.5 மடங்கு அதிகரித்து 46,720 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. மேலும், இருவழித்தடத்திற்கும் குறைவான தேசிய நெடுஞ்சாலைகள் 27,517 கிமீ லிருந்து 14,350 கிமீ ஆக கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 2 வழித்தடத்திற்கும் குறைவான தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கை மொத்த தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.