• Wed. Oct 22nd, 2025

வீடூர் அணை:தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!.

Byமு.மு

Feb 9, 2024
வீடூர் அணை:தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு 2023 – 2024 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 11.02.2024 முதல் 24.06.2024 வரை 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2200 ஏக்கர் நிலங்களும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.