• Sun. Oct 19th, 2025

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் – கேரள அரசு உறுதி

Byமு.மு

Dec 14, 2023
தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும்‌, பாதுகாப்பும்‌ செய்து கொடுக்கப்படும்‌ என கேரள தலைமைச்‌ செயலாளர்‌ உறுதி அளித்துள்ளார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ கோரிக்கைய ஏற்று கேரளாவில்‌ தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும்‌, பாதுகாப்பும்‌ செய்து கொடுக்கப்படும்‌ என கேரள தலைமைச்‌ செயலாளர்‌ உறுதி அளித்துள்ளார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன்‌ கோவிலுக்குச்‌ சென்றுள்ள பக்தர்கள்‌ அடிப்படை வசதிகளும்‌ பாதுகாப்பும்‌ இன்றி மிகவும்‌ சரமப்படுவதாக தகவல்கள்‌ கிடைத்துள்ளது.


அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழ்நாடு அரசின் தலைமைச்‌
செயலாளரை கேரள மாநில தலைமைச்‌ செயலாளர்‌ அவர்களுடன்‌ தொடர்பு
கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும்‌ ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை
வசதிகள்‌ மற்றும்‌ பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும்‌ ஏற்பாடு செய்து
உதவிட கேட்டுக்‌ கொள்ளுமாறு அறிவுறுத்தினார்‌. அதன்படி, தமிழ்நாடு அரசு
தலைமைச்‌ செயலாளர்‌ திரு. சிவ் தாஸ்‌ மீனா, இ.ஆ.ப., அவர்கள்‌ கேரள மாநில
தலைமைச்‌ செயலாளர்‌ திரு.வி. வேணு, இ.ஆ.ப., அவர்களிடம்‌ தொலைபேசி மூலம்‌
கேட்டுக்‌ கொண்டார்‌.

தமிழ்நாடு தலைமைச்‌ செயலாளர்‌ மூலம்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
அவர்களின்‌ கோரிக்கையை ஏற்று, கேரள மாநில தலைமைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌
தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில்‌ தக்க அடிப்படை வசதிகள்‌ செய்து
கொடுக்கவும்‌. பாதுகாப்பினை உறுதி செய்யவும்‌ கேரள மாநில அரசு சார்பில்‌ தகுந்த
ஏற்பாடுகள்‌ செய்யப்படும்‌ என உறுதி அளித்துள்ளார்‌.