• Mon. Oct 20th, 2025

தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

Byமு.மு

Feb 12, 2024
தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

தமிழ்நாடு சட்டபேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார், அதை கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவபோக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியது.

தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் போல எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல செய்கிறார்.

இது தான் ஜனநாயகமா ? இப்படி தான் மக்கள் போற்றும்,சட்டபேரவையை நடத்தப்பட வேண்டுமா ? தேசிய கீதத்தை புறக்கணித்து, ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா…? இவ்வாறு எல்.முருகன் X வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.