சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்டது. அனைத்திந்திய அரசு நிர்வாக சேவைகளில் மொத்தம் 1,056 காலியிடங்கள் உள்ளன. மார்ச் 5 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். முதல்நிலைத் தேர்வுகள் மே 26ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதியும் நடைபெறும். இந்திய வனப் பணியில் 150 பணியிடங்களுக்கான மற்றொரு அறிவிப்பையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முழுமையான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க:https://upsconline.nic.in/upsc/OTRP/index.php