• Tue. Oct 21st, 2025

இந்திய அஞ்சல் துறையின் 35-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி-மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு அணிகள் வெற்றி.

Byமு.மு

Feb 15, 2024
இந்திய அஞ்சல் துறையின் 35-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி-மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு அணிகள் வெற்றி

இந்திய அஞ்சல் துறையின் 35ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 12.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது.

  • 4வது நாள் போட்டி இன்று காலை 08.00 மணியளவில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிஸா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில்  மத்தியப் பிரதேச அணி 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 09.30 மணியளவில், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியைச் சேர்ந்த எஸ்.பரத் ராஜூவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் இறுதிப் போட்டி நாளை (16.02.2024) நடப்பு சாம்பியன் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையின் 35ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் நிறைவு விழா மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் அஞ்சல்துறை தலைமை இயக்குநர் ஸ்மிதா குமார்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் ஸ்ரீதேவி முன்னிலையில் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை  ஸ்மிதா குமார் வழங்கவுள்ளார். முன்னாள் இந்தியா ஹாக்கி அணியின் கேப்டனும், ஒலிம்பிக் வீரரும் மற்றும் அர்ஜுனா விருது பெற்றவருமான ரியாஸ் நபி முகமத் நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.