• Tue. Oct 21st, 2025

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து மத்திய வீட்டு வசதி துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ‘நகர்ப்புற வாழ்வாதாரம் குறித்த தேசிய பயிலரங்கம்’

Byமு.மு

Feb 17, 2024
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து மத்திய வீட்டு வசதி துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 'நகர்ப்புற வாழ்வாதாரம் குறித்த தேசிய பயிலரங்கம்'

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சகத்தின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2024 பிப்ரவரி 15 முதல் 16 வரை இரண்டு நாள் தேசிய பயிலரங்கு நடைபெற்றது.

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 150 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.  நகர்ப்புற வாழ்வாதாரங்களில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த உயர்மட்ட விவாதங்களுக்கான ஒரு தளமாக இந்த பட்டறை செயல்பட்டது,  நாட்டின் நகர்புறங்களில்  பெண்களுக்கு மீள் திறன், அதிகாரமளித்தலை மேம்படுத்துவதில் முதன்மை கவனம் செலுத்தியது.

மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மாநில இயக்கத்தின்் இயக்குநர்கள், மத்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசின் மூத்த அதிகாரிகள், யுஎன்டிபி இந்தியாவின் மூத்த அதிகாரிகள், முன்னணி துறை வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் அடங்குவர்.

பெண்கள் தலைமையிலான நகர்ப்புற வாழ்வாதாரங்கள், வளர்ந்து வரும் துறைகள் மற்றும் பருவநிலை, சேவைகள், சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் நிறுவனங்களின் வகைகளை வளர்ப்பதற்கான உத்திகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல குழு விவாதங்கள் இடம்பெற்றன.

பல பரிமாண வறுமைக் குறியீடு மற்றும் முன்னுரிமை பகுதிகள் மற்றும் புதுமையான நிதி முதலீடுகளை அடையாளம் காண்பதன் மூலம் நகர்ப்புற வறுமையின் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில் தொண்டு நிறுவனங்களின் பங்கு போன்ற பிற கருப்பொருள்களையும் இது ஆராய்ந்தது.

பெண்கள் தலைமையிலான நகர்ப்புற வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான சிறந்த நடைமுறைகளை மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இந்தப் பயிலரங்கு செயல்பட்டது, சக கற்றல் மற்றும் பிற மாநிலங்களால் வெற்றிகரமான மாதிரிகளை பிரதிபலிக்க உதவுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராகுல் கபூர், நகர்ப்புற ஏழைகளுக்கு பராமரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் நகர்ப்புற பராமரிப்பு மாதிரிகளின் கருத்தை அறிமுகப்படுத்தினார்.