• Mon. Oct 20th, 2025

குஜராத்தில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள்!.

Byமு.மு

Feb 20, 2024
குஜராத்தில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள்

அகில இந்திய தீயணைப்பு சேவை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் இந்திய அரசு உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு துறை விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 01-02-2024 முதல் 04–02–2024 முடிய நடை பெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பாக இணை இயக்குனர் முனைவர் மீனாட்சி விஜயகுமார் அவர்களது தலைமையிலான 29 நபர்கள் அடங்கிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் துறை விளையாட்டுப் போட்டிகள் தடகளம், மல்யுத்தம், கபடி, பூப்பந்து, Toughest Fire Fighter, Fire Tender Drill உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 29 மாநிலங்களில் உள்ள அணிகள் பங்கு பெற்றனர்.

இந்த விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக விளையாடி தமிழ்நாட்டிற்கு 7 தங்கம் 9 வெள்ளி 1 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்களை வென்று வந்துள்ளனர்.

மேலும் கபடி போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.
இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்ற வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து கூறி பெருமைப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு பணித்துறை இயக்குநர் ஆபாஷ் குமார் இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்.