• Sun. Oct 19th, 2025

முதலமைச்சர் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!.

Byமு.மு

Feb 22, 2024
முதலமைச்சர் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 23-02-2024 (வெள்ளிக்கிழமை), காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
தெரிவித்துள்ளார்.