• Sun. Oct 19th, 2025

மனிதர்களைக் காப்பதற்கான பணிகளில் இயன்ற அனைத்தையும் நாங்கள் மேற்கொள்வோம்

Byமு.மு

Feb 22, 2024
மனிதர்களைக் காப்பதற்கான பணிகளில் இயன்ற அனைத்தையும் நாங்கள் மேற்கொள்வோம்

வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்  துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சென்று ஆறுதல் கூறினார்.

பெங்களூருவிலிருந்து நேரடியாக 2 நாள் பயணமாக வயநாடு சென்ற மத்திய அமைச்சர், வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்றார்.

புலி தாக்கப்பட்டு உயிரிழந்த பிரஜீஷ், யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பால்,  அஜீஷ் ஆகியோரின் வீடுகளுக்கும் யாதவ் சென்றார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர், அப்பகுதி மக்கள் கூறியவற்றைக் கேட்டறிந்தார்.

மனிதர்கள், விலங்குகள் இடையேயான மோதல் இப்பகுதியில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்று அவர் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அரசு அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்று தெரிவித்தார். இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதில் கர்நாடகா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இரு மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 22 அன்று இந்தத் துறையில் பணியாற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாகவும் யாதவ் மேலும் கூறினார்.