இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
பாரத் நெட் -2 வது கட்டம்: குஜராத் ஃபைபர் கட்டமைப்பு நிறுவனம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ரயில், சாலை மற்றும் நீர் விநியோகத்திற்காக பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
காந்திநகரில் குஜராத் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதன்மை கல்வி கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
அம்பாஜியில் ரிச்சாடியா மகாதேவ் கோயில் மற்றும் ஏரி மேம்பாடு, ஆனந்தில் மாவட்ட அளவிலான மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்
தீசாவில் உள்ள விமானப்படை நிலையத்தின் ஓடுபாதை, காந்திநகர், அகமதாபாத், பனஸ்கந்தா, மெஹ்சானா ஆகிய இடங்களில் பல்வேறு சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அகமதாபாத்தில் மனித மற்றும் உயிரியல் அறிவியல் காட்சிக்கூடம், கிப்ட் நகரில் குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்
“மெஹ்சானாவில் இருப்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது”
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 22ஆம் தேதி, அயோத்தியில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டா விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததை நினைவு கூர்ந்தார். அபுதாபியில் வளைகுடா நாடுகளின் முதல் இந்துக் கோயிலை பிப்ரவரி 14 அன்று திறந்து வைத்த வசந்தபஞ்சமி நிகழ்வையும் அவர் நினைவு கூர்ந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். தாராப்பில் உள்ள வாலிநாத் மகாதேவ் கோயிலில் இன்று கும்பாபிஷேகம், தரிசனம் மற்றும் பூஜை செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கும் உலகிற்கும் வாலிநாத் ஷிவ் தாம் ஒரு புனித யாத்திரைத் தலம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆனால் ரேவாரி சமூகத்திற்கும் நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கும் இது குருவின் புனித இடமாகும் என்றும் கூறினார்.
தெய்வீகப் பணிகள் மற்றும் ‘தேசப் பணிகள்’ ஆகிய இரண்டும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தற்போதைய தருணத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். “ஒருபுறம், இந்தப் புனிதமான நிகழ்வு நடந்துள்ளது, மறுபுறம் ரூ .13,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார். ரயில், சாலை, துறைமுகம், போக்குவரத்து, தண்ணீர், பாதுகாப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் சுற்றுலா திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்கும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
புனிதமான மெஹ்சானாவில் தெய்வீக சக்தி இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் மகாதேவுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த ஆன்மீக உணர்வுடன் மக்களை இது இணைக்கிறது என்று கூறினார். இந்த சக்தி, கதிபதி மஹந்த் வீரம்-கிரி பாபுவின் பயணத்துடன் மக்களை இணைக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். கதிபதி மஹந்த் பல்தேவகிரி பாபுவின் தீர்மானத்தை முன்னெடுத்துச் சென்று அதை நிறைவேற்றியதற்காக மஹந்த் திரு ஜெயராம்கிரி பாபுவுக்கு பிரதமர் தலை வணங்கினார். பல்தேவகிரி பாபுவுடன் தமக்கு இருந்த 40 ஆண்டு கால ஆழமான தொடர்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆன்மீக உணர்வை ஊட்டுவதாக அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அவரை தமது இல்லத்திற்கு பல சந்தர்ப்பங்களில் வரவேற்றதை நினைவு கூர்ந்தார். 2021 ஆம் ஆண்டில் அவரது மறைவை நினைவு கூர்ந்த பிரதமர், அவரது முக்திக்குப் பிறகு அவரது ஆத்மா இன்று அனைவருக்கும் ஆசி வழங்குகிறது என்று கூறினார். “நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் 21 ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டம் மற்றும் பண்டைய பாரம்பரியங்களின் தெய்வீகத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” என்று கூறிய பிரதமர், நூற்றுக்கணக்கான கைவினைஞர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பங்களிப்பு, முயற்சிகளை எடுத்துரைத்தார். வாலிநாத் மகாதேவ், ஹிங்லஜ் மாதா மற்றும் பகவான் தத்தாத்ரேயா ஆகியோருக்கு இன்று வெற்றிகரமாக கும்பாபிஷேகம் செய்ததற்காக அவர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்த நிகழ்ச்சிக்காக அவர்களை வாழ்த்தினார்.
இந்தக் கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, பல நூற்றாண்டுகள் பழமையான நமது நாகரிகத்தின் சின்னங்களாகவும் திகழ்கின்றன என்று பிரதமர் கூறினார். சமூகத்தில் அறிவைப் பரப்புவதில் கோயில்களின் பங்கைப் பிரதமர் எடுத்துரைத்தார். அறிவைப் பரப்பும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக உள்ளூர் மதப் பிரிவினரைப் பாராட்டிய பிரதமர், புஸ்தக் பராப் அமைப்பு, பள்ளி மற்றும் விடுதிகள் கட்டுதல் ஆகியவை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், கல்வியை மேம்படுத்தியுள்ளன என்று கூறினார். தெய்வீக நலன் மற்றும் தேச நலன் ஆகியவற்றுக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். இத்தகைய அறிவொளி பாரம்பரியத்தை வளர்த்ததற்காக ரபரி சமாஜத்தை அவர் பாராட்டினார்.
வாலிநாத் தாமில் பொதிந்துள்ள அனைவரும் இணைவோம், மேம்பாட்டு உணர்வு குறித்து பேசிய பிரதமர், இந்த உணர்வுடன் ஒன்றிணைந்து, ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையையும் சிறப்பானதாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். “சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் நபரின் வாழ்க்கையை மாற்றுவதே மோடியின் உத்தரவாதத்தின் குறிக்கோள்” என்று அவர் கூறினார். புதிய கோயில்களின் வருகையையும், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் கட்டப்பட்டதையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், சமீபத்தில் 1.25 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்தார். 80 கோடி குடிமக்களுக்கு இலவச ரேஷன் எனப்து கடவுளின் பிரசாதம் என்றும், 10 கோடி புதிய குடும்பங்களுக்கு குழாய் நீர் அமிர்தம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு தவிர, குஜராத்தில் பாரம்பரிய இடங்களை மேம்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். பல தசாப்தங்களாக இந்தியாவில் வளர்ச்சிக்கும் பாரம்பரியத்திற்கும் இடையில் உருவாக்கப்பட்ட மோதல்கள், புனிதமான சோம்நாத் கோயில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியது, பவகாத் தளம் புறக்கணிக்கப்பட்டது, மோதேராவில் உள்ள சூரியன் கோயிலின் வாக்கு வங்கி அரசியல், ராமரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியது மற்றும் அவரது கோயிலின் வளர்ச்சியில் தடைகளை உருவாக்கியது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். குழந்தை ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோயிலில் முழு தேசமும் மகிழ்ச்சியடைந்தாலும், அதே நபர்கள் இன்னும் எதிர்மறையை பரப்புகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இன்று, புதிய இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை உருவாக்குகிறது. இன்று கட்டப்படும் புதிய மற்றும் நவீன சாலைகள் மற்றும் ரயில் தடங்கள் வளர்ந்த இந்தியாவின் பாதைகளாகும். இன்று மெஹ்சானாவுக்கு ரயில் இணைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது பனஸ்கந்தா மற்றும் படானை காண்ட்லா, சூரை மற்றும் முந்த்ரா துறைமுகங்களுடன் இணைப்பை மேம்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தீசா விமானப்படை நிலைய ஓடுபாதைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டியது பற்றி அவர் கூறினார். மோடி எந்த உறுதிமொழி எடுத்தாலும், அதை நிறைவேற்றுகிறார், தீசாவின் இந்த ஓடுபாதை அதற்கு ஒரு உதாரணம். இது மோடியின் உத்தரவாதம்” என்று பிரதமர் கூறினார்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு குஜராத்தில் தொழில்மயமாக்கலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள சாதகமான மாற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், விவசாயிகள் ஓராண்டில் 2-3 பயிர்களை விளைவிப்பதாகவும், ஒட்டுமொத்த பகுதியிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்று ரூ.1,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான குடிநீர் வழங்கல் மற்றும் நீர் ஆதாரங்கள் தொடர்பான 8 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், வடக்கு குஜராத்தில் உள்ள தண்ணீர்ப் பிரச்சினைகளை தீர்க்க இது மேலும் உதவும் என்று கூறினார். சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும், ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தின் வளர்ந்து வரும் போக்குகளுக்காகவும் வடக்கு குஜராத் விவசாயிகளை அவர் பாராட்டினார். உங்களது முயற்சிகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்சாகத்தை அதிகரிக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
உரையை நிறைவு செய்த பிரதமர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் அரசு முக்கியத்துவம் அளிப்பதை சுட்டிக்காட்டியதுடன், இன்றைய அபிவிருத்தி திட்டங்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், குஜராத் அரசின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பின்னணி
8,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் பாரத் நெட் 2-வது கட்டம் குஜராத் ஃபைபர் கட்டமைப்பு நிறுவனம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மெஹ்சானா மற்றும் பனஸ்கந்தா மாவட்டங்களில் ரயில் பாதை இரட்டிப்பாக்குதல், பாதை மாற்றம், புதிய அகல ரயில் பாதை ஆகியவற்றிற்கான பல திட்டங்கள்; கேடா, காந்திநகர், அகமதாபாத் மற்றும் மெஹ்சனாவில் பல சாலைத் திட்டங்கள்; காந்திநகரில் உள்ள குஜராத் பயோடெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் முக்கிய கல்வி கட்டிடம்; பனஸ்கந்தாவில் பல நீர் விநியோகத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியின் போது, ஆனந்த் மாவட்டத்தில் புதிய மாவட்ட அளவிலான மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை உட்பட பல முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி பிராந்தியத்தில் ரிஞ்சடியா மகாதேவ் கோயில் மற்றும் ஏரியின் வளர்ச்சி; காந்திநகர், அகமதாபாத், பனஸ்கந்தா மற்றும் மெஹ்சானாவில் பல சாலைத் திட்டங்கள்; தீசா விமானப்படை நிலையத்தின் ஓடுபாதை; அகமதாபாத்தில் உள்ள மனித மற்றும் உயிரியல் அறிவியல் காட்சியகம்; குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் (ஜிபிஆர்சி) கிப்ட் நகரில் புதிய கட்டிடம்; காந்திநகர், அகமதாபாத், பனஸ்கந்தா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










