தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.2.2024) தூத்துக்குடியில் நடைபெற்ற, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
அதிகனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பிற்குள்ளான பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.12.2023 அன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.
கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்களை தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது தான் திராவிட மாடல் அரசு. பாதிக்கப்படும்போது மட்டும் மக்களை பார்த்துவிட்டு செல்லாமல், இறுதி வரை மக்களின் துயரங்களை துடைப்பதன் அடையாளமாகத் தான், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் கூட்டுறவு துறை சார்பில், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக் கடன், மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், சிறப்பு சிறு வணிகக் கடன், கால்நடை கொள்முதல் கடன், என மொத்தம் 4446 பயனாளிகளுக்கு 24 கோடியே 54 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள், முழு சேதம் / காணாமல் போன மரப் படகு / பைபர் நாட்டுப் படகு, பகுதி சேதமடைந்த பைபர் நாட்டுப்படகு, வலைகள் மற்றும் இயந்திரம் சேதம், மீன் பண்ணைகள் சீரமைத்தல், உள்நாட்டு மீனவர்களின் காணாமல் போன வலைகள், என அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 5137 பயனாளிகளுக்கு 11 கோடியே 91 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகள்;
வேளாண்மைத் துறை சார்பில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 1,28,205 பயனாளிகளுக்கு 97 கோடியே 59 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள் மற்றும் தோட்டக்கலை துறையில் 41,498 பயனாளிகளுக்கு 25 கோடியே 88 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 150 பயனாளிகளுக்கு 12 கோடியே 43 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கான கடனுதவிகள்;
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 3845 பயனாளிகளுக்கு 132 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;
என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,83,301 பயனாளிகளுக்கு 305 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
திருநெல்வேலி உதவிகள் மாவட்ட மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட தலா 4 இலட்சம் ரூபாய் வீதமும், பழுது நீக்க தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும், 779 பயனாளிகளுக்கு 17 கோடியே 98 இலட்சம் ரூபாய் நிதியுதவி;
கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வாங்கிட 4608 பயனாளிகளுக்கு 47 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் கடனுதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடனாக 2032 பயனாளிகளுக்கு 6 கோடியே 46 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கடனுதவி, கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற 202 பயனாளிகளுக்கு கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்குவதற்கான ஆணைகள்;
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மழை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீர்செய்திட 8 பயனாளிகளுக்கு 1 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதியுதவி;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி பெருவெள்ளம் மற்றும் மாவட்டங்களில் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளாக மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி செ. அமிர்தராஜ், அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..