• Sun. Oct 19th, 2025

2024 ஜனவரி மாதத்திற்கான ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 10-வது பதிப்பு வெளியீடு.

Byமு.மு

Feb 27, 2024
2024 ஜனவரி மாதத்திற்கான 'செயலக சீர்திருத்தங்கள்' அறிக்கையின் 10-வது பதிப்பு வெளியீடு

2024 ஜனவரி  மாதத்திற்கான “செயலக சீர்திருத்தங்கள்” குறித்த மாதாந்திர அறிக்கையின் 10-வது பதிப்பை நிர்வாக சீர்திருத்தம், பொது மக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது.

2024 ஜனவரி மாதத்திற்கான அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

1) தூய்மை இயக்கம் மற்றும் நிலுவை குறைப்பு

i) 4,563 அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை முகாம்

ii). 17.02 இலட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது

iii). பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ .18.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

iv) 4,67,955 பொதுமக்கள் குறை தீர்க்கப்பட்டுள்ளன

2) முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரிப்பதற்கான முன்முயற்சி

மத்திய செயலகத்தில் செயலில் உள்ள கோப்புகளுக்கான சராசரி பரிவர்த்தனை அளவுகள் 2021 ஜனவரியில் 7.19 ஆக இருந்த நிலையில் அது 2024 ஜனவரியில் 4.58 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.

3).மின் அலுவலகம் செயல்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு

மின்-அலுவலக பகுப்பாய்வு தகவல் பலகை அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

2024 ஜனவரியில், மத்திய செயலகத்தில் உருவாக்கப்பட்ட மொத்த கோப்புகளில் 92% மின்-கோப்புகள், மொத்த ரசீதுகளில் 92.73% மின்-ரசீதுகள்  ஆகும்.