• Sat. Oct 18th, 2025

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மீது காவல்துறையில் கலைச்செல்வன் என்பவர் மோசடி புகார்!.

Byமு.மு

Feb 27, 2024
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மீது காவல்துறையில் கலைச்செல்வன் என்பவர் மோசடி புகார்

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் செந்தில்குமார் என்பவர்களின் மீது காவல்துறை தலைமை இயக்குனர் இடத்தில் கலைச்செல்வன் என்பவர் மோசடி புகார்.

திமுக ஆட்சி அமைந்த 2021 ஆம் ஆண்டு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் என்பவரும் அவருடைய நண்பர் செந்தில்குமார் என்பவரும் விராட் டிஸ்டிலரீஸ் என்ற குடிதண்ணீர் விற்பனை நிறுவனம் நடத்தும் கலைச்செல்வன் என்பவரை அணுகி உங்களுடைய வியாபாரத்தை பெருக்குவதற்காக எங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி உங்களுக்கு இதே போன்ற மேலும் இரண்டு நிறுவனங்களை புதிதாக தொடங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லியும், அரசு விழாக்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இதிலிருந்து நாம் குடிதண்ணீர் விற்பனை செய்யலாம் என்றும், எங்களுடைய ஆட்சி நடைபெருகிறது எங்களால் அரசு இயந்திரத்தை சாதகமாக பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாதிக்க முடியும் என்றும், அதற்கான செலவினமாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்கள் அதனடிப்படையில் கலைச்செல்வன் கடந்த 2.8.21 மற்றும் 27.8.21 ஆகிய தேதிகளில் தலா 50 இலட்சம் என ஒரு கோடி ரூபாய் வங்கி பரிவர்தனை மூலம் அனுப்பியுள்ளார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு வேலையும் செய்து தராமல், பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர், ஒரு கட்டத்தில் செந்தில் குமார் மனைவி சித்ராதேவியை கலைச்செல்வன் தன்னுடைய நிருவனத்தில் பங்குதாரராக சேர்த்தால் பணி முடிப்பதற்கு சுலபமாக இருக்கும் என சொன்னதின் அடிப்படையில் சித்ராதேவியை கலைச் செல்வன் தன்னுடைய நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொண்டார், ஆனால் ்அப்படி செய்தும் ராமலிங்கமும் செந்தில் குமாரும் பணி ஆணை பெற்று தருவதில் காலம் தாழ்த்தினர். இனி இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என அறிந்து பணத்தை திரும்ப கேட்டதற்கு இப்போது, அப்போது என வருடக்கணக்கில் காலம் தாழத்தி வந்தனர், ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரம் எங்கள் கையில் உள்ளது தொடர்ந்து பணத்தை கேட்டுக்கொண்டிருந்தால் உன்னை இல்லாமல் செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தனர்.

எனவே காவல்துறை தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து கலைச்செல்வன், ராமலிங்கம் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் மீது உரிய இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்துள்ளார்.