மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், 29 கோடி ரூபாய் செலவில் அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மதுரை – அரசு இராஜாஜி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், 19,472.09 சதுரமீட்டர் பரப்பளவில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆறு தளங்களுடன், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் இருதய சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தின் தரைதளத்தில், நுண்கதிர்வீச்சு துறை மற்றும் இருதய அவசர சிகிச்சை பிரிவு, முதல் தளத்தில் நவீன கேத்லேப் மற்றும் இருதய மருத்துவ சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பரிவு மற்றும் சிறப்பு வார்டு, இரண்டாம் தளத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவு, சிறப்பு வார்டு மற்றும் பொது வார்டு, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்களில் மொத்தம் 23 சிறப்பு அறுவை அரங்கம் கொண்ட கூறுவகை அறுவை அரங்கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்புதிய கட்டடத்தில், மிக நவீன மருத்துவ கருவிகளான எம்.ஆர்.ஐ, பைபிலேனார் கேத்லேப், சிங்கிள் பிளேனார் கேத்லேப், நவீன மின்னணு மானிட்டர்கள், நவீன மயக்க மருந்து நிலையங்கள், நவீன லேப்ராஸ்கோபி கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மிக நவீன கூறுவகை அறுவை அரங்கத்தில் செய்யும் நவீன இருதய அறுவை சிகிச்சை, நவீன மூளை அறுவை சிகிச்சை, நவீன இரத்த குழாய் அறுவை சிகிச்சை ஆகியவை தென்தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இந்த கட்டிடத்திற்குரிய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டடப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தல்
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தரை மற்றும் மூன்று தளங்களுடன் 8 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், முதல் தளத்தில் பொது அறுவை சிகிச்சை அரங்கம், கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, இரண்டாம் தளத்தில் இரத்த வங்கி, பொது மருத்துவ பிரிவு, ஆண் உள்நோயாளிகள் பிரிவு, மூன்றாம் தளத்தில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
அரசு இராஜாஜி மருத்துவமனையில் நெஞ்சக நுரையீரல் பிரிவுக் கட்டடம்
கோவிட்-19 பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு சுவாச நோய்களுக்கான சிகிச்சையின் தேவை அதிகரித்து வருவதுடன், நெஞ்சக நோய்க்கான சுவாச மருத்துவ புறநோயாளர்கள் பிரிவை நாடும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலுக்காக நுரையீரல் மருத்துவப் பிரிவை நாடி வருவதுடன், நுரையீரல் கட்டி அல்லது புற்றுநோயைக் கண்டறிவதற்கான தேவையும் அதிகரித்து வருவதால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில்
2 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நெஞ்சக நுரையீரல் பிரிவுக் கட்டடம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இப்புதிய கட்டடத்தில் ஆறு படுக்கைகள் கொண்ட தீவிர சுவாச சிகிச்சை வார்டு, 25 படுக்கைகள் கொண்ட பொது வார்டு, நவீனமயமாக்கப்பட்ட மூச்சுக் குழாய் உள் நோக்கி (ப்ரோன்கோஸ்கோபி) ஆய்வு அறை, மினி ஆப்ரேசன் தியேட்டர், விரிவுரை அரங்கம், கலையரங்கம், துறை நூலகம் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
சமயநல்லூர் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தல்
மதுரை மாவட்டம், சமயநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து கட்டடத்தை வைத்தார்.
இவ்விடுதிக் கட்டடத்தில், மாணவிகள் தங்குவதற்கான அறைகள், விடுதி காப்பாளர் அறை மற்றும் உள்விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு அறை, மாணவிகள் படிக்கும் அறை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிவறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தல்
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இரண்டாம் தளத்தில் பயிற்சிக்கான அறைகள் மற்றும் கூட்ட அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை பிரிவிற்கு தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை
மதுரை மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் தொற்றுநோய் (கோவிட், பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது) நுரையீரல் சிகிச்சை பிரிவிற்கு 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இம்மருத்துவமனையின் தரை தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆலோசனை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன் அறை, ஆய்வகம், அனைத்து நவீன சிகிச்சைகளுடன் கூடிய ப்ரோன்கோஸ்கோபி மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவும், முதல் தளத்தில் அவசர சிகிச்சை அரங்கு மீட்பு படுக்கை அறை, அவசர சிகிச்சைக்கு முன் மற்றும் பின் வார்டுகள், நூலகம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கவனிப்பாளர்களுக்கான காத்திருப்போர் அறை
நோயாளிகளின் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 70 முதல் 100 கர்ப்பிணிப் பெண்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளின் உடன்இருப்போர் மற்றும் அவசரசிகிச்சைக்காக வரும் பெண்கள் தங்குவதற்காக மகப்பேறு பிரிவின் வளாகத்தின் உள்ளேயே, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் சுமார் 100 நபர்கள் அமரும் இடவசதியுடன், இரண்டு தளங்களுடன் 65 லட்சும் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் தேவைக்கேற்ப உடன் இருப்பவர்கள் இந்த காத்திருப்போர் அறையிலிருந்து பிரசவவார்டுக்கு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும், வார்டு செவிலியர்கள் உடன் இருப்பவர்களை ஒலிபெருக்கியின் மூலம் அழைக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கலையரங்கம் மற்றும் விலங்குகள் ஆராய்ச்சிக் கூடம்
மதுரை மருத்துவச் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மாணவர்களுக்கான அறுவைசிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபி சிகிச்சைக்கான,
எண்டோஸ்கோபி பயிற்சிக்காக 1 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்குடன் கூடிய மேம்படுத்தப்பட்ட விலங்குகள் ஆராய்ச்சி கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இக்கூடத்தில் விலங்குகள் அறுவைசிகிச்சை அறை, பயிற்சி அறை, நரம்பியல் அறை, தனிமைப்படுத்துதல் அறை, எலி அறை, காப்பாளர் அறை, முயல் அறை, தண்ணீர் சுத்திகரிப்பு அறை, உணவு பாதுகாப்பு மற்றும் பொது அறை என பல அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலையரங்கம்
மதுரை மருத்துவக் கல்லூரியில் தரை மற்றும் முதல் தளத்துடன் கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைக்காக 900 மாணவர்கள் பங்கு பெறும் வண்ணம் 2 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இப்புதுப்பிக்கப்பட்ட கலையரங்கம், மேடை பகுதியில் எல்.இ.டி திரை, சுவர்களில் ஒலி பெருக்கிகள், ஒலி சுவர் ஓவியப் பேனல்கள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எம். கோவிந்த ராவ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இளங்கோ மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக மதுரையிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, எம். பூமிநாதன், ஏ. வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. சங்குமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..