காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழாவான கியானித் 24 (Gyanith ’24) மார்ச் 1 மற்றும் 2, தேதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஏறக்குறைய 700 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் புதுச்சேரி அரசு ஏ. நமச்சிவாயம் விழாவை தொடங்கி வைத்தார்.

கியானித் என்பது 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தளமாகும். இது மாணவர் சமூகத்தின் தொழில்நுட்ப திறமையை வெளிப்படுத்த வழி வகுக்கிறது. கியானித் என்றால் ‘ஊக்குவித்தல் ‘ அல்லது ‘ஊக்குவிப்பவர்’ என்று பொருள்படும். இந்த திட்டம் மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கிறது.
