• Sun. Oct 19th, 2025

மத்திய அரசுத்துறைகளில் பணி நியமனங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியீடு.

Byமு.மு

Mar 1, 2024
மத்திய அரசுத்துறைகளில் பணி நியமனங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த  அறிவிக்கையை  பணியாளர் தேர்வாணையம் 26.02.2024 அன்று வெளியிட்டுள்ளது.

பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற  இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 18.03.2024 (இரவு 23:00 மணி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி 19.03.2024 (இரவு 23:00 மணி).

தென் மாநிலங்களில் 2024 மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை  (உத்தேசமானது) கணினி அடிப்படையிலான தேர்வுகள் கீழ்காணும் முறையில் 23 மையங்கள் / நகரங்களில் நடைபெறும். ஆந்திரப்பிரதேசத்தில் 11 மையங்கள் ; தெலங்கானாவில் 3 மையங்கள்; புதுச்சேரியில் 1 மையங்கள்; தமிழ்நாட்டில் 8 மையங்கள்.