இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியும், பூங்கொத்தினையும் அனுப்பி வைத்தார்.
தேசிய அளவில் தோழமைக் கட்சிகளின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் சரத்பவார், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாகவும், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா அவர்கள் தொலைபேசி வாயிலாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
மாநில அளவில் தோழமைக் கட்சிகளின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.வி. தங்கபாலு, எம். கிருஷ்ணசாமி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகரி;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள்;மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி. அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா;
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், துணைத் தலைவர் நவாஸ் கனி, பொதுச் செயலாளர் அபுபக்கர்;
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி. அப்துல் சமது;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்;
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன்;
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பாக மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள்; ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி இராமதாசு ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
திரைப்பட நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் சமூகவலைதளம் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய விவசாயிகள் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம், திருநங்கைகள் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..