• Sun. Oct 19th, 2025

தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – முதலமைச்சர் திரு.மு.க, ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…

Byமு.மு

Dec 15, 2023
சிறப்பு முகாம்கள் ஏற்பாடு

விருதுநகர் மாவட்டம், பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க, ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை

வட்டம், பனையடிபட்டி

கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15-12-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த திரு.சண்முகராஜ் (வயது 36) த/பெ.திரு.பொம்மு ரெட்டியார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில்

உயிரிழந்தவரின்

குடும்பத்திற்கும்

அவரது

உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.