• Sun. Oct 19th, 2025

இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம்…

Byமு.மு

Dec 15, 2023

ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சி வெங்கடசலபுரம் கிராமத்தில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சமுதாய நலக்கூடம் அமைக்க நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் அவர்கள் முன்னிலையில் அக்கிராமத்தை சார்ந்த சாரதா என்ற பெண்மணி குத்துவிளக்கேற்ற பூமி பூஜை செய்து ஊர்ப்பொதுமக்களுடன் MLA அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஏழை எளிய பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரம் என்ற கிராமத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அதுபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் தொகுதியில் தேவைப்படும் கிராமங்களுக்கு அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும் எனக்கூறினார் மேலும் இராஜபாளையம் தொகுதியில் ஏழை எளிய பொதுமக்கள் நலன்பெறும் நோக்கில் சுமார் 1000 நபர்கள் அமரகக்கூடிய வகையில் மிகப்பெரிய குளிர்சாதன வசதியுடன்கூடிய திருமண மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

இந்நிகழ்வில் கிளைச் செயலாளர்கள் வனராஜ் காளிமுத்து ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து ஊர்நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.